நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்தர் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிருவாக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் ஆ.சசிந்திரன் உயிரிழந்தார்.
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று பகல் ஒரு மணியளவில் தனியாக காரை செலுத்தி வந்துள்ள நிலையில் நிந்தவூர் மாட்டுபாளையம் வீதி வளைவில் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல் கல்முனை அஷ்ரப்வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.