நாட்டில் இன்று ஐந்து மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஏ முதல் எல் வரையிலான 12 வலயங் களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான 8 வலயங் களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் மின்வெட்டை அமுலாக்கத் திட்ட மிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது