அவுஸ்திரேலியாவின் குடியேற்றவாசிகளிற்கான தடுப்புமுகாமில் 12 வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான சிவகுரு ராஜன் நவநீதராஜாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில் 12 வருடங்களாக குடியேற்றவாசிகளிற்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ராஜனை குடிவரவு துறை அமைச்சர் விடுதலை செய்துள்ளதை தமிழ் அகதிகள் பேரவை வரவேற்றுள்ளது.
அதோடு விடுவிக்கப்பட்ட ராஜன் ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் முகாமிலேயே பெருந்துன்பத்தை சந்தித்துள்ளார் என தெரிவித்துள்ள தமிழ் அகதிகள் பேரவை, அரசாங்கம் அவரை இறுதியாக சமூகத்திற்குள் அனுமதித்துள்ளமை குறித்து நிம்மதி அடைகின்றோம் என குறிப்பிட்டுள்ளது.
எனினும் அவருக்கு அரசாங்கம்நிரந்தர பாதுகாப்பினை வழங்கவில்லை என தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன்மயில்வாகனம் தெரிவித்துள்ளார். விடுதலை செய்யப்பட்டுள்ளதால்அவர் நிம்மதி அடைந்திருப்பார் என தெரிவித்துள்ள, அரன் மயில்வாகனம் ஆனால் அவரது எதிர்காலம் நிச்சயமற்றதாக தெளிவற்றதாக காணப்படுகின்றதுஎனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது பெரும் கவலையை அளிக்கின்றது அவர் நிரந்தர பாதுகாப்பினால்கிடைக்ககூடிய பாதுகாப்பின்மையால் பல பிரச்சினைகளை எதிர்கொள்வார் என தெரிவித்துள்ள அரன்மயில்வாகனம் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் ஆபத்தும் உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட ராஜன் இனப்படுகொலையிலிருந்து தப்பி அவுஸ்திரேலியாவிற்கு வந்த நிலையில் ,குடிவரவு துறை அதிகாரிகள்அவருக்கு 2010 இல் அகதிஅந்தஸ்த்தினைவழங்கினார்கள் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
இருப்பினும் பின்னர் விவரிக்க முடியாத வகையில் அவருக்கு எதிர்மறையான ஏசியோ பாதுகாப்பு வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள தமிழ் அகதிகள் பேரவை, ஆனால் ஆறுவருடங்களிற்கு பின்னர் அவரால் எவருக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டதன் மூலம் இந்த அநீதி முடிவிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஆனால் அவ்வேளை விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்தன- ராஜன்மீண்டும் அகதி அந்தஸ்த்திற்கு விண்ணப்பிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார், அவ்வேளை அவரது அகதி அந்தஸ்த்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் பேரவை தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் அவர் தனக்கு எதிரான தீர்ப்பிற்கு எதிராக போரடி வருகின்றார் – 2019 இல் அவர் இரத்தப்புற்றுநோயினால்பாதிக்கப்பட்டு அதற்காக கிசிச்சை பெற்றுவருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைகின்றது, தமிழ் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு புறக்கணிக்கப்படுகின்றனர்.
கண்மூடித்தனமான தடுத்துவைத்தல் சித்திரவதைகள் ஏனைய மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன என தெரிவிக்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இவ் வருடம் அவுஸ்திரேலியா இணை அனுசரணை வழங்கி இருந்தமையினையும் தமிழ் அகதிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் தமிழர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்குவதை அவுஸ்திரேலியா அங்கீகரித்துள்ளதாலும், ராஜனின் நோய் காரணமாகவும் அவருக்கு அவுஸ்திரேலியா நிரந்தர பாதுகாப்பை வழங்கவேண்டும் எனவும் தமிழ் அகதிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.