அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்க பொலிஸார் பயன்படுத்தும் நபர்களை கொலை செய்யக் கூடிய ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், சட்டத்தரணிகள் உட்பட சில வெகுஜன அமைப்புகள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளன.
போர் காலங்களில் பயன்படுத்தப்படும் தானியங்கி துப்பாக்கி போன்றவை இப்படியான மக்கள் ஆர்ப்பாட்டங்களின் போது பயன்படுத்தக் கூடிய சட்ட ஏற்பாடுகள் எதுவுமில்லை என சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எரிபொருளை வழங்குமாறு கோரி அண்மையில் றம்புக்கனை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளாத இளம் குடும்பத் தலைவர் கொல்லப்பட்டதுடன மேலும் சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது