மொனராகலை நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய பிள்ளைகளின் பாடசாலை பாடத்திட்டத்தில் புதிய பாடமாக சைகை மொழியை அறிமுகப்படுத்துமாறு கோரி இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய சிறுவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 25 பேர் கலந்துகொண்டுள்ளனர்.