அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள வர்த்தகப் போர் நிலைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கனடிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கனடிய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 25 வீதம் வரி விதிப்பை அறிவித்திருந்தது.
இந்த வரி விதிப்பு தீர்மானத்திற்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கா ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்திருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து வரி விதிப்பது குறித்த தீர்மானத்தை ஒத்தி வைப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
உத்தேச வரிவிதிப்பு யோசனை 30 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் மற்றும் ட்ரூடோ ஆகியோர் இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கப் போவதாகவும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் குற்றவாளிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த உள்ளதாகவும் கனடா உறுதிமொழி வழங்கியுள்ளது.