ஹப்புத்தளை – பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. பெரகலை பகுதியில் உள்ள பொது மலசலகூடம் செல்லும் படியில், குறித்த நபர் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரத்தினபுரி- கரப்பிஞ்ச பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான, மேலதிக விசாரணைகளையும் ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்