தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்று (17) பிற்பகல் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறி ஒன்று, 3 சொகுசு பேருந்துகள், 2 ஜீப் வண்டிகள், 4 கார்கள் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.