அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பராமரிப்புச் செலவு அதிகரிப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.