வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஸ்காட்லாந்து தேசத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஸ்காட்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவரது விஜயத்தினை தமிழர்கள் கடுமையாக எதிர்த்து அங்கே பெரும் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்காட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான, (The Herald) இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார் என்ற செய்தியை முழுப் பக்கத்தில் பிரசுரித்துள்ளது.
இதன் காரணமாக நடைபெறவுள்ள தமிழர்களின் போராட்டத்திற்கு ஸ்காட்லாந்து மக்களின் ஆதரவும் கிடைக்குமெனவும் கூறப்படுகின்றது.