முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பபட்டிருந்த முன்பிணை மனு இன்று (6) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி இது தொடர்பில் காரணிகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்தது.
“சிரிலிய சவிய” கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாகத் தாம் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ இந்த முன்பிணை மனுவை தமது சட்டத்தரணிகள் ஊடாக நேற்று பிற்பகல் தாக்கல் செய்திருந்தார்.
மருத்துவ காரணங்களுக்காக அவர் அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

