ஆஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிட்ஸ்வர்த் நகரத்திற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பிட்ஸ்வர்த் அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிர் பிழைப்பதற்காக அவர் பல மணி நேரம் காரின் கூரையில் இலங்கைர அமர்ந்திருந்துள்ளார். எப்படியிருப்பினும் நிவாரணக் குழுவினர் அவரது உயிரைக் காப்பாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர் கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்கள் இவ்வாறு நீருக்கு மத்தியில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நீச்சல் தெரியாதமையினால் அவர் அச்சத்தில் வாகனத்தின் மீது ஏறி அமர்ந்திருந்துள்ளார்.
எனினும் அவர் மிகவும் சாதாரணமாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதனை போன்று காரின் மீது அமர்ந்திருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எனினும் குறித்த இலங்கையர் மிகவும் அதிஷ்டசாலி, அத்தனை மணித்தியாலங்கள் இருந்த போதிலும் எவ்வித ஆபத்துக்களுமின்றி மீட்கப்பட்டதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.