முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கப்படுகின்றது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை காவல்துறையில் பணியாற்றிய விக்ரமரத்ன, இலங்கையின் 35-வது காவல்துறை மா அதிபராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

