கல்கமுவ, மஹனான்னேரிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறு குழந்தை ஒன்றும், பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஒருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த ஆண் மற்றும் பெண் 28 வயதுடையவர்கள் எனவும் அவர்களுக்கு இடையில் கள்ள தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த நபர் பெண்ணையும் அவரது குழந்தையையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.