மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் 437 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மற்றும் 998 பயணிகள் பஸ்கள் 207 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் மற்றும் 1,290 சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறிய கடைகள் ஆகியன பரிசோதனை செய்யப்பட்டன.