வவுனியாவில் 7 வயது பாடசாலை மாணவன் ஒருவன் அயல்வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியிலேயே குறித்த மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாலமோட்டை – நவ்வி பகுதியை சேர்ந்த 7 வயதுடைய பவனேஸ்வரன் அபிஷேக் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று பி.ப 2 மணியளவில் வீட்டிலிருந்து வகுப்புக்கு சென்று நீண்ட நேரமாகியும் அச் சிறுவன் வீடு திரும்பவில்லை என உறவினர்களால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதுடன், தந்தையார் மற்றும் அப்பம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.