மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்க கூடிய சாமர்த்தியம் உங்களுக்கு பிறக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் பொறுமையை கடைபிடிக்க முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் சாதக பலன்கள் கிடைக்கப் போகிறது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த மகிழ்ச்சியில் விரிசல் விழலாம் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அதிர்ஷ்டகரமான பலன்களை கொடுக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த காரியங்கள் நடைபெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய தொழில் துவங்க வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் பலிதமாக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் போட்டி பொறாமைகளை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றியுள்ளவர்களால் சங்கடங்கள் வர வாய்ப்புகள் உண்டு கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அனாவசிய பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் தேவையற்ற மன குழப்பங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க வாய்ப்பு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே நடக்கும் சிறு சிறு வாக்குவாதங்கள் நேர்மறையாக இருப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிரிகளின் வலையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுய முடிவுகள் நன்மைகளை கொடுக்கப் போகிறது. கணவன் மனைவியுடைய அன்னோன்யம் குறையும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொலிவு கூட கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பழைய பிரச்சினைகளுக்கு முடிவு எடுக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுக எதிர்ப்புகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமையை விரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வளரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய கனவுகளுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி பிறக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கையுடன் இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் முன்வைப்பது நல்லது. சுய தொழிலில் உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள்.