மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். பிறர் உடனான வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடந்த கால நினைவுகளால் மனக்கவலை உண்டாகும். பணம் தொடர்பான விடயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சராசரியான நிலையே இருக்கும், பெண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். சிலர் பொது காரியங்களில் ஈடுபட்டு நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல் – வாங்கல்களில் திருப்திகரமான நிலை இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இன்றைய தினம் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களிடம் உறவு கொண்டாடுவார்கள். அந்நிய நபர்கள் உங்களுக்கு எதிர்பாராத உதவிகளை செய்வார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உடலில் அதீத அசதி இருக்கும். எதிலும் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாத நிலை இருக்கும். கடன் திருப்ப வசூலாவதில் இழுபறி நிலை நீடிக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். மனைவி வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தொட்டதெல்லாம் துலங்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் ஆதரவை விரும்புவார்கள். நீண்ட நாள் இழுபறி நிலை நீடித்த விடயங்களில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்கள் செல்வாக்கு பெறுவார்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் பணியிட உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலர் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். நண்பர்கள் வழியில் சிலருக்கு பண வரவு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் உயர்வுகள் ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் இருந்த தடைகள் நீங்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும்.