மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுபவம் தரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சிக்கு உரிய நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதுக்கு இதமான நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை நடத்தி காட்டும் சாத்திய கூறு உண்டு. விடாமுயற்சி உங்களுக்கு தேவையான விஷயங்களை கிடைக்க செய்யும். குடும்பத்தில் குழப்பங்கள் தவிர்த்தல் நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்தது கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. வீண் அலைகள் ஏற்படலாம் என்பதால் திட்டமிட்ட காரியம் நன்மை தரும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் எனவே கூடுமானவரை ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சொத்து ரீதியான விஷயங்களில் அனுகூல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் தரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் தொலைதூரப் பயணங்கள் ஏற்படலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களுக்கு அனுகூல பலன் கொடுக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிலவற்றை தியாகம் செய்ய வேண்டி இருக்கும். மனதை அலைபாய விடாமல் உங்களுடைய வேலையில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி போடவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமாற்று அமைப்பு என்பதால் பணவரவை விட செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடினமான விஷயங்களும் கஷ்டம் இல்லாமல் முடியும் இனிய நாளாக இருக்கிறது. உங்களுடைய சக்தியை நல்ல வழியில் நல்லவர்களுக்காக செலவு செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குடும்ப தேவை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்க கூடும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பண விஷயத்தில் அலட்சியமாக இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் ஏற்றம் காணும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வீண் கோபங்களை தவிர்ப்பது நல்லது. யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை நினைவில் வைத்து பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சனி உங்கள் நாக்கில் குடிகொள்ளும் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் செல்லும் இடமெல்லாம் மரியாதையை பெறுவீர்கள். உங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய காலமாக அமையும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எண்ணங்களுக்கு ஏற்ப பலன்களும் இருக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளும் வந்து சேரும். தேவையற்ற இடங்களில் எதிர்பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுபட கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை புதிதாக துளிர் விடக்கூடிய நாளாக இருக்க போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். சாதுரியத்தால் சாதனை செய்வீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் மனம் தளராமல் போராடுவீர்கள். துணை மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்கள் தானாகவே விலகிச் செல்வார்கள். கணவன் மனைவி இடையே யார் விட்டுக் கொடுப்பது என்பதில் ஈகோ வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும்.