மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வளம் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததை ஜெயித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் தீரும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையப் போகிறது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பல எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைய கூடிய நல்ல நாளாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் நீங்கும். ஆரோக்கியம் ஏற்றம் கானும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நெருக்கம் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய யுத்திகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு சாதகமான பலன்களை அனுபவிப்பீர்கள். தேவையற்ற குறுக்கு வழியை கையாள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்களின் மீது இருக்கும் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த முடிவுகள் சாதக பலன் தரும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் வந்து சேரலாம் யாருக்கும் எந்த வாக்குறுதிகளையும் கொடுக்கும் முன் யோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்கள் மூலம் மன உளைச்சல் ஏற்படலாம் எனவே வீண் சிந்தனை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் இனிய நாளாக இருக்க போகிறது. குடும்பத்தில் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமை மேலும் மெருகேறும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எல்லாவற்றிலும் ஒரு விதமான தயக்கத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களை எதிர்த்து போராடுவதில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். புதிய வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாழ்க்கைத் தரம் உயரக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்கள் மூலம் அனுகூல பலன் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான நேரத்தில் நண்பர்கள் மூலம் உதவிக்கரம் கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். எனவே எதிர்பார்ப்புகளை குறைத்து நிதானம் காப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.