மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபயோகங்கள் கைகூடி வரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இனம் புரியாத ஒரு குழப்பம் இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு வேலையில் நாட்டம் செலுத்துவது நல்லது. சுய தொழிலில் அதிக லாபம் காணப்படும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை வேண்டும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உரிமையை நீங்கள் விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க குறுக்கு வழியில் செல்லாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்கட்டுப்பாடு தேவை. இல்லாமல் மனதை அலைபாய விடாதீர்கள். கணவன் மனைவி இடையே ஒளிவு மறைவில்லாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சல் மிகுந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு விட்டுக் கொடுத்து செல்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத நபரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்திலிருந்து பிரஷர் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மையுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எவ்வளவு தடைகளையும் தாண்டி வெற்றியை நோக்கிய பயணத்தில் ஈடுபடுவீர்கள். சுய தொழிலில் லாபம் இரட்டிப்பாகும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் அதிகரிப்பர்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் பெருக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தடைபட்டு கொண்டிருந்த சுப பேச்சு வார்த்தைகள் அனுகூல பலன்களை தரும். சுய தொழில் செய்யும் போது நேர்மையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியர்களின் மூலம் கேட்டது கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள விரிசல் மறையும். சுய தொழிலில் லாபம் எதிர்பார்த்த அளவிற்கு உயரும். ஆடம்பரத்தை குறைந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதுமைகள் படைக்கும் திறமை உண்டாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கும். தொட்டது துலங்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமை மேலும் மெருகேறும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். சுய தொழிலில் வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.