மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வளர்ச்சி தரக்கூடிய நாளாக அமையப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரப் போகும் நாளாக அமையப் போகின்றது. எதிர்பாராத நன்மை நடக்கும். வாரா கடன் வசூல் ஆகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கம் சரி பாதி இருக்கும். பிரச்சினைகள் பெரியதாக இருக்காது. எதிர்மறையான சிந்தனை மன நிம்மதியை கெடுக்கும். தன்னம்பிக்கை இல்லாமல் செயல்படுவீர்கள். கவலை வேண்டாம் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம் சொல்லுங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பாராட்டு கிடைக்கும். மனது சந்தோஷம் பெறும். உயர் பதவிகள் பாராட்டை தேடி தரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப காரிய செலவு ஏற்படும். சொந்த பந்தங்கள் உங்களுடைய கஷ்டத்திற்கு தோள் சாய்ப்பார்கள். பாதுகாப்பாக ஒரு உணர்வை பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. முக்கியமான முடிவுகளை நாளைக்கு தள்ளி போடுங்கள். மன சஞ்சலம் இருக்கும். மன குழப்பம் ஏற்படும். நிம்மதியான தூக்கம் கூட இருக்காது. நாளை எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதீங்க.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்வேகம் அதிகமாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனம் கூடாது. இன்றைய வேலையை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூடவே கூடாது. விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றி.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் எப்போதும் போல சந்தோஷமாக அமையும். பிரச்சனைகளுக்கு இடமில்லை. உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். சொந்த பந்தங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக கணவன் மனைவி வாக்குவாதம் கூடாது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுடைய தைரியம், உங்களை வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு கொண்டு போகப் போகின்றது. தைரியத்தை மட்டும் கைவிடாதீர்கள். நீங்கள் ஜெயிப்பது உறுதி.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வரும். ஆனால் வெளியில் காட்டாதீங்க. கோபப்பட்டு ஏதாவது பேசிவிட்டால் பிரச்சனை உங்களுக்குத்தான். பொறுமையும் நிதானமும் அவசியம் தேவை. மேல் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ளக் கூடாது. மனைவி திட்டினால் கூட அமைதியாக இருப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதானமான நாளாக இருக்கப் போகிறது. எந்த வேலையையும் முழுசாக செய்து முடிக்க முடியாது. சோம்பேறித்தனமும் தூக்கமும் மாறி மாறி வரும். மனதிற்கு ஆறுதல் பெற கோவிலுக்கு போய் அமைதியாக இருவது நிமிடம் அமர்ந்து தியானம் செய்யுங்கள். வேறு வழியே கிடையாது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். இருந்தாலும் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக தான் அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சனைகளை சமாளித்து விடலாம் என்ற தைரியம் வந்துவிடும். கவலைப்படாதீங்க கடவுள் உங்கள் பக்கம் தான் இருக்கிறான்.