மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப காரியங்கள் கைக்கூடி வரக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருந்தவர்களுடைய கருத்துகளால் விவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் நீங்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே வார்த்தையில் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிலும் போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நெருக்கமானவர்களிடமிருந்து சில மன சங்கடங்களை பெறலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அன்பு அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு பெருகப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய யோகம் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுடைய எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அனாவசிய கருத்துக்களை திணிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முடிவெடுக்கக் கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்கிற அனுபவம் பெறுவார்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்தித்து செயல்பட வேண்டிய முக்கிய நாளாக இருக்கிறது. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய நபர்களிடம் பழகும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த விரிசல் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் லாபம் அதிகரிக்க புதிய விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுபவ பாடம் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி காக்க வேண்டிய இனிய நாளாக இருக்கிறது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம் பொறுமையுடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்கள் போட்டியாளர்களிடம் வீண் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் பட்டதை சட்டென பேசி விடக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதிலும் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். குடும்ப நபர்களிடையே அலட்சியம் காண்பிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரக்கூடிய விரையங்கள் சுப விரயமாக மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது நம்பிக்கை பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வெளியிடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது திறமைகள் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நெகட்டிவ் விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் விட்டதை பிடிக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதில் இடையூறுகளை சந்திப்பீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை, சச்சரவுகள் வந்து மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் இருப்பினும் வரவுக்கு ஏற்ப செலவுகளும் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தனித்திறமைகள் வளரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் செய்து முடிக்க கூடிய வல்லமை இருக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருக்கக்கூடிய நெருக்கடிகளை திறம்பட எதிர்கொள்வீர்கள். சுய தொழிலில் லாபம் காண உறுதியாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள்.