மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பும் அன்னோன்யமும் பெருகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த காரியங்கள் சாதக பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே சில சங்கடங்கள் வந்து மறையும். மன இறுக்கத்தை குறைப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் மகிழ்ச்சி அடையக் கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த மனக்கசப்பு அகலும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் எதிர்வரும் பிரச்சனைகளை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளால் சில தொல்லைகள் வரக்கூடும் கவனம் வேண்டும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாக கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. தொலைதூரப் போக்குவரத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகள் அதற்கு ஏற்ப வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் வரலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு பிரச்சனை பெரிதாக வாய்ப்பு உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திருப்தி தரும் வகையில் பணப்புழக்கம் இருக்கப் போகிறது. எதிர்பார்த்த இடங்களில் இருந்து பழைய பாக்கிகள் வசூல் ஆகும். குடும்பத்தில் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல் வரலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேர வாய்ப்புகள் உண்டு எனவே ஆடம்பரத்தை குறைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது மாற்றங்களை காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய நகைச்சுவையான பேச்சு மற்றவர்களை எளிதில் கவரும் வண்ணம் இருக்கப் போகிறது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத உதவிகளை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனதில் இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். சுயதொழியில் எதிர்பாராத செலவுகளும், நஷ்டங்களும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே முன்னெச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் நிகழலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுலபமாக முடிக்க வேண்டிய வேலையும் இழுபறியாக வாய்ப்புகள் உண்டு எனவே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த விஷயம் பூர்த்தி அடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனக்குழப்பங்கள் தீர்ந்து தெளிவு அடைவார்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணவு நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. முகத்தில் ஒரு புது பொலிவு தென்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே வீண் சண்டைகளை வளர்க்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் போட்டி மனப்பான்மை தேவை.