மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. மனதிற்கு இனிய செய்திகளை கேட்க இருக்கிறீர்கள். சுப பேச்சு வார்த்தைகள் நடக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த போர் நீங்கி அமைதி பிறக்கும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதுக்கு பிடித்த நல்ல விஷயங்கள் எல்லாம் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட காலம் நடக்குமா? என்று நினைத்த ஒரு காரியம் நடக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளில் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் வார்த்தையில் கவனம் செலுத்துவது நல்லது. வெளியிடங்களில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய தொழில் துவங்கும் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தற்புகழ்ச்சி தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள். சுப காரியங்களில் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நற்சிந்தனை இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் போர் முடிவுக்கு வர இருக்கிறது. எதிர்பாராத சில திருப்பங்கள் வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் சுமுகமானதாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் அவபொழுது சண்டை சச்சரவுகள் வந்து மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த மன குழப்பங்கள் அகலும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் தொழில் ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் லேசாக உணரக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியானவின் விரயங்கள் ஏற்படலாம் பராமரிப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களில் அதிக ஈடுபாடு உண்டாக கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பால் உயரக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீண்ட கால எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருக ஆரம்பிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடைகளை கண்டு தளராமல் தொடர்ந்து உழைப்பை கொடுப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை காட்டிலும் செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை தாண்டி முன்னேறி செல்வது உத்தமம். ஆரோக்கிய பாதிப்புகளை உடனே கவனியுங்கள்.