மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத ஏமாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை தொடங்கும் பொழுது கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் எல்லாம் முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தின் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவை. உங்களை புரியாதவர்களிடம் நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்து அளவிற்கு லாபம் காண புதிய யுத்திகள் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்களின் உதவிகளை பெறுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களை மென்மேலும் மெருகேற்ற முயற்சி செய்வீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிறு சிறு வாக்குவாதங்களால் மன இறுக்கம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கொள்கையில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்க வேண்டாம். சுய தொழிலில் நீங்கள் லாபம் காண நிதானத்தை கையாளுவது தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் தென்படலாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஜெயம் உண்டாகக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. விட்டு சென்ற உறவுகள் உங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு சில சாதகமற்ற விஷயங்கள் நடக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையில்லாத இடங்களில் பேச்சை குறியுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துடிப்பாக செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் போட்டிகளை விமர்சிக்க வேண்டாம். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண வரத்து இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விவேகம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை மூடி மறைக்காமல் முழுமையாக சொல்லி விடுங்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே ஒற்றுமை குறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் லாபம் காண கூடுதல் உழைப்பு தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய முயற்சிகள் நற்பலன் தரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் மெல்ல மறையும். உங்கள் தொழிலில் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் எனினும் ரொம்பவும் நெருங்கி பழக வேண்டாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தான் செய்வது தான் சரி என்கிற ஒரு மனப்பான்மை சாதகமற்ற அமைப்பாக இருக்க கூடுகிறது. சமயோஜித புத்தியுடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுமை படைக்க கூடிய நாளாக இருக்கிறது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நண்பர்கள் மூலம் நன்மை காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்தநிலை காணப்படலாம் உத்வேகத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகிறது. சுப காரியங்களில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுய தொழிலில் லாபம் உயரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்