மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பயணங்கள் தவிர்ப்பது நன்மை தரும் அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில மன கஷ்டங்கள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் போராடி எடுக்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தில் நற்பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகோதரத்துவ வகையில் நன்மைகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் உளைச்சலை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் ஆதாயம் காணும் யோகம் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் நிறைவேறக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்களை வளர்க்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போராடித்தான் எதையும் முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவசர காரியங்களில் கூட அனுகூல பலன்கள் உண்டாகும் அதிர்ஷ்டம் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு வெற்றி தரும் விஷயங்கள் காலதாமதம் ஆகலாம் எனவே கவலை கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் மௌனம் காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணி புரிபவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடியான திட்டங்கள் தீட்டி மகிழக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியூரில் இருந்து வர வேண்டிய நல்ல செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் வாக்குவாதங்கள் டென்ஷனை ஏற்படுத்தலாம் எனவே எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்வரும் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழந்த சில விஷயங்களை அடைவதற்கான அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சங்கடங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொட்டது தொடங்கக்கூடிய நல்ல நாள் என்பதால் எதையும் தைரியமாக செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கான நல்ல யோகமான அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவர்வதற்கான யுக்திகள் தெரிய வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் உதவி கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று பேச அது ஒன்று முடிய கூடும் என்பதால் கூடுமானவரை தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செய்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்கிற அங்கலாய்ப்பு இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த பனிப்போர் மறையும். தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் எனவே திட்டமிடாமல் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழந்த உரிமை கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்க போகிறது. நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடி மன நிறைவை கொடுக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவை பெறுவதற்கு உத்தியோகத்தில் உள்ளவர்கள் முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும்