புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார். இவர் உச்சம் மற்றும் மூலத்திரிகோண நிலையை கன்னி ராசியில் அடையக்கூடியவர். அப்படி இருக்க தற்போது கன்னி ராசியில் ஆட்சி, அதிபதியாக அமர்வதோடு, உச்ச நிலை பெற்று அமர்வதால் யாருக்கெல்லாம் அற்புத பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தின் படி புதன் பகவான் மிதுனம், கன்னி ராசிக்கு அதிபதியாகவும், ஆட்சி பெற்றும் அமர்வார். அதோடு கன்னியில் மூலத்திரிகோண நிலை அடையக்கூடியவர். கன்னியில் உச்சம் பெற்றும் அமர்பவர். இவருக்கு 7ம் பார்வை மட்டும் உள்ளது. திறமை, பேச்சாற்றல், அறிவுத் திறன் என பல சிறப்பான பலன்களைத் தரக்கூடியவர்.
கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புதன் 2024 அக்டோபர் 10 வியாழன் அன்று காலை 11:25 மணிக்கு துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கன்னி ராசியில் புதனின் தாக்கத்தால் சில ராசியின் வாழ்க்கையில் அற்புதமான காலமாக இருக்கும்.
புதனின் அமைப்பால் ஒவ்வொரு ராசிக்கும் இருந்த கடினமாக சூழல் மாறும். உங்களின் போராட்டங்கள் விலகி, சாதகமான நிலை ஏற்படும். நிதி நிலை முன்னேற்றம் அடையும். தொழில், வியாபாரம் தொடர்பாக உங்களின் செயல்பாடு பயனுள்ளதாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழல் உருவாகும்.
கன்னி ராசியில் புதன் நுழைந்துள்ள இந்த தருணத்தில், அங்கு ஏற்கனவே சஞ்சரித்து வரும் சூரியன், கேதுவுடன் புதன் இணைந்து மூன்று கிரக சேர்க்கை யோகம் உருவாகிறது. இதன் காரணமாக 12 ராசிகள் மீதும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். செயல்கள் மேன்மை அடையும்.