யுக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற தீர்மானம் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகளும், ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா மற்றும் எரித்ரியா முதலான 5 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.
எனினும் இதில் இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.