வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்துசுவாமி ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாலூரானின் உற்சவத்தை காண , உள்நாட்டு மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பலர் வருகை தந்துள்ளனர்.
கொரோனா தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் பொருட்படுத்தாது பக்கதர்கள் நல்லூர் கந்தனின் அருளைப்பெற ஆலயத்திற்கு தினமும் செல்கின்றனர்.
இந்நிலையில் முகநூலில் நல்லூர் கந்தப்பெருமானை தரிசிக்க சென்ற பக்தர் ஒருவரின் ஆதங்கமான பதிவு வைரலாகியுள்ளது. அவர் தனது பதிவில்,
ஒரு ரூபாய் டிக்கெட் எடுத்து, அர்சனையும் செய்து, நல்லூரான் அருளை வாங்க முடிஞ்ச எனக்கு….. 300 ரூபாய் Bill எடுத்து, ஒரு மணிநேரம் காவல் நின்டும், RIO இல ஜஸ்கிரீம் வாங்க முடியலையே என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அதோடு அங்கயும் உந்த QR Code முறைமை வந்தா நல்லா இருக்கும் போல… ஓடர் கிடைச்சாலும் மேசைக்கு வாறத்துக்குள்ள அரைவாசி கரஞ்சிடும் போல இருக்கே… எங்கட சனம் வரிசை கட்டி நிக்கிற டிசைன் அப்படி இருக்கு எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற QR Code அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.