நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபாய தலைமையிலான அரசை கண்டித்து யாழ் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தடுமாறும் அரசே பதவி விலகு எனும் கண்டன சுவரொட்டிகளே இவ்வாறு நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவியரீதியில் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.