மரபுரிமைக்கு உயிரூட்டுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், தொல்பொருள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 1,000 வேலைத்திட்டங்களில், வடமாகாணத்திற்கு நான்கு திட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்றாக, யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கிலியன் தோப்பு ரூ.65 மில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை (01) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி. மதிவதனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரலாற்று ரீதியாக, யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனாகக் கருதப்படும் சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடமே சங்கிலியன் தோப்பு எனக் கருதப்படுகிறது.

