யாழ்ப்பாணத்தில் சிறுமியை கடத்திச் சென்று இரு மாதங்கள் குடும்ப வாழ்க்கையை ஈடுபடுத்திய
இளைஞனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்படி குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி
நீதவான் நீதிமன்று நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு கொடிகாமம் பொலிஸ் பிரிவில் வசித்து வந்த 17 வயது சிறுமியை அராலி பகுதியை
சேர்ந்த இளைஞன் கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
மேலும் முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு மாதங்களாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த
கொடிகாமம் பொலிசார் நேற்று முன்தினம் இளைஞனையும் சிறுமியையும் கைது செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.