யாழ்ப்பாணம் – கொட்டடியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவர் குளுக்கோஸ் வயரினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(22.09.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரேத பரிசோதனை
11 வயதான சிறுவனான, தனது மகனை தாயார் தேடி சென்ற நிலையில் நாவல் மரக்கிளையில் குளுக்கோஸ் வயரினால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சிறுவனை உடனடியாக மீட்ட அவரது தாயார், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும், அதற்குள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவனின் மரணம் தவறான முடிவு என பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் பதிவாகியுள்ள மிகக் குறைந்த வயதுடைய சம்பவமாக இது பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மிகக் குறைந்த வயதுடைய உயிர்மாய்ப்பு சம்பவம் 13 வயது சிறுவன் தொடர்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

