பொம்மைவெளியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பொம்மை வெளி பகுதியில் நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வந்த 38 வயது பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து சுமார் 2.40 கிராம் ஹெராயின் போதைப்பொருளானது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட்டது.
கைது செய்யப்பட்ட பெண் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் ஏற்கனவே மேல் நீதிமன்ற வழக்கில் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணையில் இருந்தபோதிலும் குறித்த நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பெயரிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.