யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதான ஒருவரே கோடரியால் தாக்கப்பட்டுள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.