யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டை சுற்றிவளைத்த மானிப்பாய் பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தகாத நடவடிக்கைகள் நடப்பதாக பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு சோதனையிட்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் அடிப்படையில் 55 வயது மற்றும் 51 வயதான இரு பெண்கள் மற்றும் 42 வயதான ஆண் ஒருவர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது