யாழ்.போதனா வைத்தியசாலையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரை மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்.இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரை மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குறித்த குழந்தை, காலை 6 மணியளவில் திடீரென மூச்சடங்கி காணப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
இந்நிலையில் இறப்பு விசாரணையை யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.