முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் இறுதி நாட்களை முன்னிட்டு கடந்த வாரம் முதல் இன அழிப்பு நாட்களாக நினைவேந்தல்கள் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி மற்றும் நினைவேந்தலை தமிழர் தாயகம் இதயபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவ சமூகம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் தூபியில் சிங்கள மாணவர்களும் பூத்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனை முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.