தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் காணாமல் போன 8 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் லிஹிலுமோ மிசினி என்ற 8 வயது சிறுமி காணாமல் போனார்.அவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டனர்.இந்த நிலையில் பிரபல ஷாப்பிங் மாலான ஹெமிங்வேஸ் மால் அருகில் சிறுமி மிசியின் சடலம் செவ்வாய்க்கிழமை அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி காணாமல் போன போது அவர் தாய் உடன் இல்லாமல் இருந்துள்ளார்.இதையடுத்து சிறுமியை பாதுகாக்காமல் அலட்சியம் காட்டியதாக அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.இதனிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிறுமி மிசி, தனக்கு தெரியாத ஆண் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.