முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் எதிர்வரும் திங்கட்கிழமை (8) டெண்டர் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
அதன்படி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அந்நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எத்தனை முட்டைகள் இறக்குமதி செய்யப்படும், அதற்கு எந்த இறக்குமதியாளர் தெரிவு செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.