உயிரிழந்த பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரொருவரின் சடலத்தை மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே ஆகிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் ஈப்ரா லெப்பே மொஹமட் ஹக்கீம் என்ற நபரொருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.