புத்தளம் காட்டுப்பகுதியில் இருந்து அரியவகை வெள்ளை நிற மூன்று ஆந்தைக் குஞ்சுகள் மீட்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் ஆந்தையின் பராமரிப்பில் இருந்த ஆந்தை குஞ்சுகள் மரத்தில் இருந்து எப்போதாவது விழுந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த ஆந்தைகள் Barn Owl இனத்தைச் சேர்ந்தவை. மீட்கப்பட்ட மூன்று ஆந்தைகளின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும், அவை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக ஆந்தைகள் நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆந்தை குட்டிகள் இனி தனிமையில் இல்லை, நிக்கவெரட்டிய வனவிலங்கு சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் வயதை எட்டியதும், உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்படும் என, வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்

