தாமரை தடாக கலையரங்கிற்கு அருகில் இருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் ஒன்றியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளஅனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பொலிஸார் கண்ணீர்புகை நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர் .
கொழும்பு பல்கலைகழகத்திற்கு முன்னால் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.