மஸ்கெலியா- கங்கேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில், அவரது கணவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய வசந்தமலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை தனது மனைவியை நித்தரையிலிருந்து எழுப்பும் போது, அவர் உயிரிழந்திருந்ததாக அப்பெண்ணின் கணவரால், மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தம்பதியினர் இருவருக்கும் தொடர்ச்சியாக பிரச்சினைகள் காணப்பட்டதுடன், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அப்பெண், அவரது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அயலவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நேற்று முன்தினம் இரவும் தம்பதிகள் இருவருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கணவரை கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.