வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கட்பகபுரம் பகுதியில் குடும்ப தகராறில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவர் மனைவியைத் தள்ளிய போது கீழே விழுந்து மனைவி மயக்கமுற்றுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரான கணவர் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர், பெண்ணின் மகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்துள்ளனர்.
எனினும், கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் அப்பகுதியில் வசிக்கும் 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணைகளுக்காக சடலம் வவுனியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய 46 வயதான இறந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (15) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.