மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரான அடக்குமுறை என அப்பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு 15.07.2025 அன்று இடம்பெற்றது
