மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவருக்கும் அவரின் தாயாருக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பின் பிரபல பாடசாலையின் ஆசிரியை என்பவரே இவ்வாறு தொலைபேசியில் தாயாருக்கும் மகனுக்கும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
குறித்த மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியை என கூறப்படுகின்ற நிலையில் இந்த சம்பவம் மட்டக்களப்பு மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியை முன்னாள் பிரதி அமைச்சருக்கும் மிகவும் நெருக்கமானவர் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆசிரியையின் குறித்த நடவடிக்கையை கண்டித்தும், அவரை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறும் கோரி மட்டக்களப்பு மாணவர் சமூகம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் எதிர் வரும் 26 ம் திகதி காலை 10.மணிக்கு காந்தி பூங்கவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் கலந்து கொண்டு மாணவர் பலத்தின் முன்னால் இவ்வாறான கடத்தல் கும்பல்களின் அடிவருடிகளின் அச்சுறுத்தல் மாணவர்களை எதுவும் செய்ய முடியாது என்பதனையும் சம்மந்தப்பட்ட ஆசிரியரை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறும் கோரியும் இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாணவர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.