உக்ரைன் போர்களத்தில் தேனிலவைக் கழிக்கும் உக்ரேனிய தம்பதிகள் உலக நாடுகளிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.
ரஷ்யா உகரை மீது போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர்.
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24 ஆம் திகதி போர் தொடுத்த நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் , விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது. அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன.
குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று ரஷியாவின் தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்களத்தில் யாரினா அரிவா மற்றும் ஸ்வியாடோஸ்லாவ் பர்சின் புதுமண தம்பதிகள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இணைந்து உள்ளனர். இந்த ஜோடி மே மாதம் திருமணம் செய்யவிருந்தது, ஆனால் ரஷியா படையெடுத்தபோது கடந்த வாரம் கீவில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு, துப்பாக்கியை ஏந்தியபடி முற்றுகைக்கு உட்பட்ட ஒரு நகரத்தில் தங்களுடைய தேனிலவைக் கழிப்பதைப் பற்றியும், ரஷிய படைகள் தங்கள் தாய்நாட்டை ஆக்கிரமிப்பதற்கு எதிராக ஆயுதம் ஏந்தியதாகவும் கூறி உள்ளனர்.
இதுகுறித்து அரிவா கூறுகையில், எங்களிடம் உள்ள இந்த புதிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது கடினம். இது வசந்த காலத்தின் முதல் நாள் என்றும், பொதுவாக மக்கள் உக்ரைனின் தேசிய மலலான சூரியகாந்தியை விதைப்பார்கள். – அதற்கு பதிலாக, அவர்கள் ரஷியாவின் தாக்குதலை எதிர்ப்பார்கள். இங்கே யாரும் தோற்று விடுவோம் என்று சொல்லவில்லை, அழவில்லை.
இங்கு அனைவருக்கும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இது எல்லாம் காலத்தின் கேள்வி. எனவே, இந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள், உண்மையில் போராடத் தயாராக இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் நிலத்துக்காக உயிர் துறக்கவும் தயாராக உள்ளனர். இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
பர்சின் கூறுகையில், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஒரே இடத்தில் கூட்டி ஒரு நல்ல கிளாஸ் ஒயின் அருந்தக்கூடிய நேரம் விரைவில் வரும் என்று நம்புகிறேன். எல்லோரிடமும், போர் முடிந்துவிட்டது, நாங்கள் வென்றோம்’ என்று சொல்லுங்கள்.
உலகின் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுகிறோம் என்பதை ரஷியா மக்கள் உட்பட இந்த உலகில் உள்ள அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
அதேசமயம் உக்ரைனுக்கு பணம், உணவு, ஆயுதங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் மற்றும் ரஷியா மீது கூடுதல் தடைகளை விதிக்கவும் புதுமண தம்பதியினர் சர்வதேச சமூகத்தை, கேட்டுக் கொண்டனர்.