மாத்தறையில் வெள்ளைக் கோட்டின் குறுக்கே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து தொடர்பில் தெரியவருவது,
எதிர் பாதையில் இருந்து வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் மாத்தறை நகரில் நேற்றைய தினம் (09-07-2022) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மாத்தறை, திஹாகொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்